Saturday, November 7, 2009

பள்ளம் இல்லாமல் ஏற்றம் இருக்க முடியாது.

ள்ளம் இல்லாமல் ஏற்றம் இருக்க முடியாது.

ஏற்றம் இல்லாமல் பள்ளம் இருக்க முடியாது.

பூமியில் மேடு பள்ளங்களை ஏற்படுத்தி வைத்திருப்பது இயற்கையின் லீலை.

அதேபோல் வாழ்க்கையில் மேடு பள்ளங்களை ஏற்படுத்தி வைத்திருப்பது இறைவனின் லீலை.

ஒருவேளை நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் வாழ்க்கையில் மேடு பள்ளங்களே இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் தெரியுமா?

சகாரா பாலைவனம் போல் இருக்கும்.

இறைவனுக்குத் தெரியும், எங்கே ரோஜாவை வைக்க வேண்டும், எங்கே முள்ளை வைக்கவேண்டும் என்று.

நம்முடைய வேலை, லீலையை எதிர்ப்பதல்ல.

லீலையை வரவேற்பது.

வரவேற்கத் தெரிந்தவருக்கு வாழ்வு லீலை.

வரவேற்கத் தெரியாதவர்க்குத்தான் வாழ்வு தொல்லை.

எனக்கு வாழ்வு என்பது லீலை. உங்களுக்கு...

நேராக சாதுவிடம் மிராசுதாரர் ஓடோடி வந்தார். சாஷ்டாங்கமாக காலில் விழுந்து, ``உங்களை எவ்வளவு இழிவுபடுத்திவிட்டேன். என் பாவத்தை மன்னித்துவிடுங்கள். நான்தான் இந்தச் செயலை செய்யத் தூண்டி இந்தச் சிறுவனை அனுப்பி வைத்தேன். என்னை மன்னித்தேன் என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள்'' என்று கதறி அழுதார்.

சாது சொன்னார், ``ஓ! நீங்கள் சொல்லித்தான் இந்தச் சிறுவன் செய்தானா?

இந்த உண்மை எனக்குத் தெரிந்திருந்தால், இத்துணை முறை ஆற்றிலும் இறங்கி இருக்கமாட்டேன். என் பிரார்த்தனையும் நிறைவேறியிருக்காது. உங்களுக்குள்ளும் மாற்றம் நிகழ்ந்திருக்காது. இந்தச் சிறுவனுக்குள்ளும் நல்ல மாற்றம் நிகழ்ந்திருக்காது.

என்னைப் பொருத்த அளவு, ஒவ்வொரு நாளும் கொண்டாட்டமே. ஒவ்வொரு நிகழ்வும் ஆசீர்வாதமே!

அதனால்தான் அடிக்கடி சொல்வேன். எனக்கு வாழ்வு என்பதே ஒரு லீலை. உங்களுக்கு?!'' என்று அவர்களிடம் கேட்டு நிறுத்தினார். அந்த சில வினாடிகளில் அந்த இடத்தையே ஒரு ஆனந்தமயமான அமைதி ஆட்சி செய்தது.

சாதுவின் இந்த சில வார்த்தைகள், அவர்களுக்குள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆழமான மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த ஒரு கேள்வி அவர்களுக்குள் ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஜீவன் முக்த அனுபவம் அந்த வினாடியே அவர்களுக்குள் மலர்ந்தது என்று அந்தக் கதை முடிகின்றது.

குருவிடமிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையுமே அமிர்தம், ஒவ்வொன்றுமே ஞானசூத்திரங்கள். அதனால்தான் சாதுவின் கடைசி வாக்கியத்தைக் கேட்ட அந்தச் சிறுவனும், மிராசுதாரரும் ஜீவன் முக்தரானார்கள் என்று அந்தக் கதை சொல்கின்றது..
 
ஆத்ம தியானம்

இந்தக் கதையின் மூலமாக, உங்கள் ஒவ்வொருவருக்குள் அனுபவமாக மாற இருக்கின்ற சத்தியங்களையே, உங்களுக்குச் சாத்தியப்படுத்தும் சூத்திரங்களாகத் தருகின்றேன்.

சத்தியம் 1 :என்ன நிகழ்ந்தாலும், அது நமக்குத் தேவை என்பதனால்தான் நிகழ்கிறது.

சத்தியம் 2:என்ன நிகழ்ந்தாலும், அது நாம் கேட்பதனால்தான் நிகழ்கிறது.

சத்தியம் 3 : என்ன நிகழ்ந்தாலும், அது மங்கத்தன்மையை, ஜீவன் முக்த தன்மையை நமக்குள் சேர்ப்பதற்காகவே நிகழ்கிறது.

இந்த சத்தியங்களை ஆழ்ந்து தியானியுங்கள்


The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.

No comments: