Wednesday, November 4, 2009

மென்மையாக இரு

மென்மையாக இரு §Áý¨Á¡¸ þÕ

  

குரு மரண படுக்கையில் இருந்தார்.... பொது மக்களும் சிஷ்யர்களும் குருவின் படுக்கையை சுற்றி நின்று இருந்தார்கள் .



தலைமை சீடன் குருவை நெருங்கி கலங்கிய கண்களுடன் கேட்டான்,"...குருவே உங்கள் திருவடிக்கு எனது வணக்கம்... உங்களை சிறிது காலத்திற்கு பிறகு ஸ்துல உடலில் பார்க்க முடியாது... இதை நினைக்கும் பொழுது ஏற்ப்படும் வருத்தத்தை அளவிட முடியாது... தயவு செய்து எனக்கு கடைசியாக ஒரு உபதேசம் செய்யுங்கள். இனி வரும் காலங்களில் உங்கள் உபதேசம் எனக்கு குருவாக இருக்கட்டும்...



உடலில் இருந்து உயிர் பிரியும் நிலையிலும் அமைதியும் ஆனந்தமும் குடி கொண்ட முகத்துடன் சிஷ்யனை பார்த்தார் குரு...




பின்பு தனது வாயை அகலமாக திறந்தார்... பற்கள் இல்லாத வாயை கட்டினார். தனது நாக்கையும் காண்பித்தார்.



சிஷ்யனுக்கோ ஒன்றும் புரியவில்லை.


கேள்விக்குறியை முகத்தில் தாங்கி நிற்கும் சிஷ்யனை பார்த்து கூறினார்,

 

 
"எனது பற்கள் கடினமானதாக இருந்தன , அவை எனது இறுதி காலம் வரை என்னுடன் இல்லை. மென்மையான எனது ¿¡க்கு என்னுடன் இபொழுதும் இருக்கிறது...எனதருமை சிஷ்யா.... எப்பொழுதும் மென்மையாக இரு. இதுவே எனது இறுதி உபதேசம் .."




சிஷ்ய பரம்பரைக்கு உபதேசித்த குருவின் பிராணன் "மென்மையாக" பிரிந்தது...



Add whatever you love to the Yahoo! India homepage. Try now!

No comments: